இதனிடையே, இந்தியர்களுக்கு கனடா அதிகம் முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் குடியுரிமையை வழங்கிவருவதாக விர்ஜினியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு 39340 இந்தியர்களுக்கு கனடா நிரந்தர குடியுரிமை வழங்கியிருந்தது. இந்நிலையில், அதன் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 80685 ஆக உயர்ந்துள்ளது. 2019ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவது 105 விழுக்காடு உயர்ந்துள்ளது.
மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கனடா நிரந்தர குடியுரிமையை வழங்கிவருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் திறப்பதன் மூலம் கனடாவுக்கு இந்தியர்கள் அதிகம் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.