கிவ் நகரிலிருந்து இந்தியர்கள் யாரும் வெளியேற வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
உக்ரேன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள் எல்லையைக் கடந்து ருமேனியா போன்ற நாடுகளுக்கு வந்தாக வேண்டும்.ஆனால் இந்தப் பயணம் அவர்களுக்கு எளிதல்ல.
இந்நிலையில் உக்ரேனின் கீவ் மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து இந்தியர்கள் யாரும் வெளியேற வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. கடும் போர் சூழல் நிகழும் சமயத்தில் பயணம் மேற் கொள்வது பாதுகாப்பானது இல்லை. குறிப்பாக ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அங்கு அமலில் உள்ள ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட பின் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் சமயத்தில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.