Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களே…! பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருங்க…. இந்திய தூதரகம் ஆலோசனை…!!

உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்ய படைகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம்,உக்ரைனின்  தங்கி இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக ஆலோசனை வெளியிட்டுள்ளது, “அதில் உக்ரைனில் ராணுவச் சட்டம் அமலில் இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்நிலை மக்கள் வெளியே வருவது கடினம். தலைநகரில் தங்குவதற்கு இடம் இன்றி  தவிக்கும் மாணவர்களுடன்  தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். சில இடங்களில் ஏர் சைரன்கள் , வெடிகுண்டு எச்சரிக்கைகள் போன்றவை கேட்கின்றன.

நீங்கள் அத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டால் அந்தந்த இடங்களிலே பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவரவர் தங்கியிருக்கும் இடங்களின் அருகிலுள்ள பதுங்கு குழிகளின் பட்டியல் கூகுள் மேப்பில் உள்ளது. அவற்றில் பல நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைந்துள்ளன. ஆபத்தான சூழ்நிலையில் எதிர்கொள்ளும்போது அந்த பதுங்கு குழிகளில் தங்கிக் கொள்ளுங்கள். மேலும் தயவு செய்து உங்கள் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும்  இருங்கள். தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். உங்கள் ஆவணங்கள் எல்லா நேரத்திலும் உங்கள் உடனே எடுத்துச் செல்லுங்கள் என தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |