உலகளாவிய வங்கி பயன்பாட்டை டிஜிட்டல் முறையில் மொபைல் ஆப் மூலம் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
உலக அளவில் அனைவரும் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். தங்களின் அன்றாடத் தேவைக்கும் வாழ்க்கைக்கும் வங்கி கணக்கு உதவும் என்ற வகையில் இதனை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் உலகளாவிய வங்கி பயன்பாட்டை டிஜிட்டல் முறையில் மொபைல் ஆப் மூலம் அமெரிக்காவை சேர்ந்த Aeldra என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியர்களுக்கு இந்நிறுவனம் இவ்வசதியை பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. இதில் வங்கி கணக்கு தொடர ஐந்து நிமிடத்தில் வீட்டிலிருந்தே பாஸ்போர்ட் கொண்டு வங்கி கணக்கைத் தொடங்கலாம்.