உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களுக்காக 24 மணி நேர அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாக விளங்கும் உக்ரைன் ‘நேட்டோ அமைப்பில்’ இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் எல்லையில் சுமார் 1 1/2 லட்சம் வீரர்களை குவித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் ரஷ்யா உக்ரைன் நாட்டுக்குள் ஊடுருவி நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வந்தன. ஐ.நா அமைப்பு ரஷ்யாவிடம் போரை தவிர்க்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளது. ஆனால் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் ராணுவ நடவடிக்கையை கைவிடுமாறு நாட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
மேலும் உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் ஏற்படுத்த தொடங்கிவிட்டதால், அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து மத்திய அரசு தரப்பில், இந்தியர்களின் நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உக்ரைனில் உள்ள 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் பணியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
எனவே இவர்களுக்காக 24 மணி நேர அவசர உதவி எண்ணை கிவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி உக்ரைனின் தற்போதைய நிலைமை மிகவும் நிச்சயமற்றது. ஆதலால் +380 997300428, +380 997300483 என்ற எண்ணை தொடர்பு கொள்வது மூலம் 24 மணி நேர அவசர உதவி பெறலாம் என கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் ஐ.நா பாதுகாப்பு சபையில் பேசி உள்ள இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைன் ரஷ்யா விவகாரத்தால் அந்த நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பு பெருமளவில் குறைந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார்.