சர்க்கரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று சூறாவளி காற்றின் காரணமாக நடுக்கடலில் கவிழ்ந்ததையடுத்து அதிலிருந்த 11 இந்திய மாலுமிகளை ஈரான் கடற்படை காப்பாற்றியுள்ளது.
ஓமன் நாட்டின் சோகர் துறைமுகத்திற்கு படகு ஒன்று சர்க்கரையை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்த படகில் 11 இந்திய மாலுமிகள் இருந்துள்ளார்கள்.
இதனையடுத்து சூறாவளி காற்று உட்பட பல முக்கிய காரணங்களால் அந்தப் படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. மேலும் அது ஈரான் நாட்டின் கடல் பகுதியினுள்ளும் நுழைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஈரான் நாட்டின் கடற்படை வீரர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 11 இந்திய மாலுமிகளை மீட்டுள்ளார்கள்.