இந்தியர்களை குறிவைத்து ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த இரண்டு சீனர்கள் மற்றும் 115 நேபாளிகளை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
நேபாளத்தின் தலைநகரான காத்மண்ட் மற்றும் பக்தபூரில் இந்தியர்களை குறிவைத்து சில கும்பல் ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய அதிகாரிகள் இது தொடர்பாக 2 சீனர்கள் மற்றும் 115 நேபாளிகளை கைது செய்துள்ளார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சீனாவை சேர்ந்த 2 பேர் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பக்தபூரில் போலியாக ஐடி நிறுவனம் என்ற பெயரில் ஆன்லைன் கடன் செயலியை தொடங்கியுள்ளார்கள். இந்த ஆன்லைன் கடன் செயலி மூலம் இந்தியர்களை குறிவைத்து 3 முதல் 30,000 வரை கடன் கொடுத்துள்ளார்கள். அவ்வாறு கொடுத்த கடனை திருப்பி செலுத்தாத இந்தியர்களை மிரட்டி இந்த கும்பல் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளது தெரிய வந்துள்ளது.