Categories
உலக செய்திகள்

இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை…. அதிபர் புதின் உறுதி….!!!!

இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு ரஷ்ய அதிபர் புதின், இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. மனித கேடயங்களாக பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்கு செல்லவிடாமல் தடுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய மாணவர்கள் பாதுகாப்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |