உக்ரேனில் இருந்து ருமேனியா வந்துள்ள இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தில் களமிறங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரேன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 6 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள் எல்லையை கடந்து ருமேனியா போன்ற அண்டை நாடுகளுக்கு வந்தாக வேண்டும். இந்தப் பயணம் அவர்களுக்கு எளிதல்ல.
இந்நிலையில் உக்ரேனில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் விமானப்படை விமானங்கள் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்களை விரைந்து மீட்பதற்கு விமானப்படை விமானங்களை பயன்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உக்ரைனில் இருந்து ருமேனியா வந்துள்ள இந்தியர்களை ஆப்பரேஷன் கங்கா திட்டத்தில் பயணிகள் விமானத்துடன் விமானப்படை விமானத்தை களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.