இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை தவறாமல் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். http://hcicolombo.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி இதில் மாணவர்களும் பொதுமக்களும் தனித்தனியாக பதிவு செய்யவேண்டும். கூடுதல் தகவல்களுக்கு +94-11-242860 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.உங்கள் நண்பர்கள் யாரேனும் இருந்தால் உடனே தெரியப்படுத்துங்கள்.
Categories