ரஷ்யாவின் போர் காரணமாக 10 ஆயிரம் இந்தியர்கள் உட்பட 1,30,000 வெளிநாட்டினர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உக்ரேன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 12 ஆவது நாளாக போரைத் தொடர்ந்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஸ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இருதரப்பு மோதலில் அப்பாவி பொதுமக்களும், வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில் உக்ரைன் அரசு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரஷ்ய போர் காரணமாக 10 ஆயிரம் இந்தியர்கள் உட்பட 1,30,000 பேர் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உதவியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.