இலங்கைக்குச் செல்ல உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறுகையில், இலங்கைக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள்,பயணத்திற்கு முன்பு கரன்சிகளை மாற்றுவது மற்றும் எரிபொருள் சூழல் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் நன்றாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் இருக்கும் போது கவனம் உடனும் எச்சரிக்கையுடனும் இருக்கும்படி அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவசர காரியங்கள் மற்றும் அத்தியாவசிய காரணங்களுக்காக இலங்கைக்கு செல்ல விரும்புவோர் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள இந்திய துணை தூதரகங்களை அணுகவும்.