Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் கோயிலுக்கு கொடுக்கும் பணம் இவ்வளவா?….. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…..!!!!

கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் மத வழிபாட்டு தலங்களுக்கு இந்தியர்கள் ரூபாய் 23 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அசோகா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் சில தகவல்கள் வெளியாக்கியுள்ளன. அதில் 18 மாநிலங்களை சேர்ந்த 81 ஆயிரம் குடும்பங்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் நாட்டிலேயே தென் மாநிலங்களில் தான் மத வழிபாட்டு தலங்களுக்கு அதிக நன்கொடை வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக தென்னிந்தியர்களை அதிக அளவில் பணத்தை தானமாக கொடுக்கிறார்கள். 100 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை வழங்குவதை மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு அடுத்து இந்தியர்கள் சுமார் 2,900 கோடி ரூபாயை பிச்சைக்காரர்களுக்கு வழங்கி வருகின்றனர் என்று அந்த ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |