இந்தியர்கள் சவுதி அரேபியா விசா பெற இனி காவல்துறையின் அனுமதி சான்று சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சவுதி அரேபியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமைதியான முறையில் வசித்து வருவது மட்டுமல்லாமல் நாட்டின் மேம்பாட்டிற்கும் பங்களித்து வருகின்றார்கள். இந்நிலையில் இருநாட்டில் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் காவல்துறையின் அனுமதி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.