இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.இந்நிலையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்தும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 11ம் தேதி முதல் 28ம் தேதி வரை தடை அமலில் இருக்கும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார். இந்தியாவில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகும் நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.