ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால் விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆப்கான் விமான நிலையத்தில் 150க்கு மேற்பட்ட இந்தியர்களை தாலிபான்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கூறிய தாலிபான்கள் தாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை என்று மறுத்துள்ளனர்.