இந்தியாவிடமிருந்து உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பெருமிதம் கூறியுள்ளார்.
இந்தியாவின் உலக புகழ்பெற்ற ‘இந்தியா குளோபல் வீக்’ என்ற வார உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இளவரசர் சார்லஸ், காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றார்.அதில் தனது கருத்துக்களை கூறிய இளவரசர் சார்லஸ் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் உறுதியான வாழ்க்கை முறையும் நிலையான எதிர்காலம் உருவாக்குவதை பற்றியும் மற்ற உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும் என புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பிரதமர் மோடியிடம் பேசும்போது அவர் பலரது கருத்துக்களை கூறினார்.தற்போது கொரோனா தொற்றுநோயால் உலகம் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் பல நற்கருத்துகளை கற்றுக் கொள்வது மிகவும் அவசியம்.
உலகத்தை புதுப்பிக்க உடமை கொள்ளாத நற்குணம், பேராசை இல்லாத தன்மை போன்ற பண்டைய யோக ஞானத்தை அனைவரும் இந்திய மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் சமயம் இது. இத்தகைய கொள்கைகள் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நம்மை ஊக்குவிக்க பெரிதும் கற்றுக்கொடுக்கிறது என கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி இதனை இந்தியா புரிந்துகொண்டு அதன் தத்துவமும் மதிப்பும் நிலையான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது என்று கூறுகின்றனர்.இந்திய நாட்டின் புலம்பெயர்ந்த சமூகத்தின் பல உறுப்பினர்களிடம் நான் பல விவாதங்களை இங்கிலாந்து நாட்டில் நடத்தியுள்ளேன் என இளவரசர் சார்லஸ் கூறினார். மேலும் இந்தியாவின் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கானபங்களிப்பை நாம் மிகவும் ஊக்குவிக்கிறேன் என தனது கருத்துக்களை காணொளி காட்சி மூலம் உச்சி மாநாட்டில் இளவரசர் சார்லஸ் கூறினார்.