இந்தியாவிடம் உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து உலக நாடுகள் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது என பல நாடுகள் பாராட்டி வருகின்றன. இந்தியாவில் கொரோனா இறப்பு வீதம் மிகவும் குறைந்த அளவே இருப்பது இதற்கு சிறந்த சான்றாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவலால் சீனா மீது உலக நாடுகள் கடுமையான வெறுப்புடன் இருக்கும் இந்த சூழ்நிலையில் சீனாவின் அத்துமீறலை சமாளித்து, சீனாவுக்கு பதிலடி கொடுத்து இந்தியா மீண்டு வருவது உலக நாடுகள் பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
பிரதமர் மோடியின் நடவடிக்கையே இந்தியா இப்படி ஒரு புகழின் உச்சத்துக்கு சென்றது என்று பல நாட்டு தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது, கொரோனா காலத்தில் நிலையான எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.லண்டனில் நடந்த உச்சி மாநாட்டில் பேசிய அவர் இயற்கை, சமூக, மனித, உடல் மூலதனத்தின் சமநிலையின் மூலம் நீண்ட கால மதிப்பை உருவாக்கும் நிலையான சந்தைகளை உலகம் உருவாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.