Categories
உலக செய்திகள்

“இந்தியாவிடம் தோற்றதாக வெளியான செய்தி”….தடுப்பூசி வழங்குவது குறித்து பிரபல நாடு வெளியிட்ட தகவல் … !!

சீனா கொரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு விநியோகிப்பதில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததாக வெளியான செய்திகளுக்கு  மறுப்பு தெரிவித்துள்ளது .

கொரோனா தடுப்பூசிகளான  கோவக்ஸின் மற்றும் கோவிஷில்ட் தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளில் இலவசமாகவும், வர்த்த ரீதியாகவும் இந்தியா விநியோகித்து வருகின்றது . இந்த தடுப்பூசி விநியோகத்தில் சீனா இந்தியாவிடம் தோல்வியடைந்து விட்டதாக சில அறிக்கைகள் வெளியாகின. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை அன்று சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் பெய்ஜிங் செய்தியாளர்களிடம்,தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு இந்தியா விநியோகித்து வருகின்றது.அது  வரவேற்கத்தக்க விஷயம் தான்.

ஆனால் இதில் சீனா இந்தியாவிடம் தோற்று விட்டது என்று கூறுவதை எங்களால் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.  முதலில் உள்ளூரில் இருக்கும் சுமார் 140 கோடி மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த வேண்டி உள்ளது என்றார்.அதன் பிறகுதான் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பது  பற்றி சிந்திக்க முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் சீனா கொரோனா தடுப்பூசிகளை 53 நாடுகளுக்கு வழங்குவதாகவும் ,அதைத்தொடர்ந்து ஐ.நா.வின் கோவக்ஸ் திட்டத்திற்கு 1 கோடி தடுப்பூசிகள் வழங்குவதாகவும்  உறுதியளித்துள்ளது.

Categories

Tech |