இந்தியாவிலேயே மோசமான மொழி என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடும் பொழுது அதற்கு பதிலாக கன்னடம் என்று கூகுள் காட்டி இருந்தது. இதனால் கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதன் காரணமாக கர்நாடகாவில் மிகப் பெரும் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இந்நிலையில் அந்த பக்கத்தை கூகுள் நிறுவனமும் நீக்கியது. தற்போது கூகுள் நிறுவனம் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்த நிலையில், கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.