லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து தனது இணையதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர். இவர் புகழ்பெற்ற பாடகியும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவருக்கு 92 வயது ஆகிவிட்டது. இவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து நேற்று காலை 8.15 மணி அளவில் காலமானார். இவரின் இழப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லதா மங்கேஷ்கர் இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். “இந்தியாவின் நைட்டிங்கேல்” என்று அழைக்கப்படும் இவருக்கு இசைக்கலைஞர்கள், தலைவர்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
இந்திய
இசைக் குயிலுக்குத்
தமிழ் அஞ்சலி#LataMangeshkar pic.twitter.com/dxFX43qIBV— வைரமுத்து (@Vairamuthu) February 6, 2022
இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து லதா மங்கேஷ்கரின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது. “இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது. இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்துவிட்டது. லதா மங்கேஷ்கர் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் மீது தன்னுடைய இசை என்ற சாதியத்தை செலுத்தியது அவருடைய பெருமை. அவர் பாடியது மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல, ரோட்டுக் குடிக்கும் தான்.
லதா மங்கேஷ்கரின் பாடல்களை கேட்டு உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களின் வியர்வையை சுண்டி எறிந்திருக்கிறார்கள், காதலை வளர்க்கிறார்கள், கவலைகளை மறந்து இருக்கிறார்கள், மகிழ்ச்சியில் ஆடி இருக்கிறார்கள். மேலும் கண்ணீர் துடைத்து கொண்டிருக்கிறார்கள். லதா மங்கேஷ்கர் இந்தியர்களின் வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்ட அந்த மாபெரும் இசையரசியின் புகழ் வாழ்க, அவரின் பாடல்கள் வெல்க” என்று தெரிவித்திருந்தார்.