Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் இந்த உதவி மிகப்பெரியது”…? இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் பாராட்டு…!!!!!!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கரம் கொடுத்து தாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் வழங்கியுள்ளது. இந்தியாவின் இந்த உதவியால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்த்தி பெரமுனா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்த கட்சி தலைவர் அனுரா திசநாயகே ஆறு மாதங்களில் இந்தியா வழங்கிய 3.8 பில்லியன் டாலர் உதவியையும் 4 வருடங்களில் சர்வதேச நிதியம் வழங்கப்போகும் 2.9 பில்லியன் டாலர் உதவியும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் பேசும்போது இலங்கை மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நேரத்தில் இந்தியா மிகப்பெரிய அளவில் உதவி அளித்துள்ளது இல்லை என்றால் இலங்கை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என கூறியுள்ளார். நாட்டின் நிலைமை தொடர்ந்து மோசம் அடைந்து வருவதாக கூறிய அவர் அரசுக்கு எதிராக புதிய போராட்டங்கள் நடைபெற கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சூழலில் 2022 ஆம் வருடத்திற்கான உலக சுற்றுலா அழகி போட்டி இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறுகின்றது. டிசம்பர் எட்டாம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் 80 நாடுகளை சேர்ந்த அழகிகளில் பங்கேற்க இருக்கின்றார்கள்.

இந்த போட்டியை நடத்துவதற்கு இலங்கையுடன் சுமார் 15 நாடுகள் போட்டி போட்டுள்ளது கடைசியில் அந்த வாய்ப்பை இலங்கை தட்டிப் பறித்திருக்கிறது. இதன் மூலமாக இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்படும் என நாட்டின் சுற்றுலா அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது கொரோனா மற்றும் பொருளாதார சிக்கலால் இலங்கை சுற்றுலாத்துறை தொடர்ந்து துவண்டு போயிருக்கிறது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கிடையே இலங்கையில் சட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக பதிவு செய்யப்பட்டிருக்கின்ற பாக்கியான் சட்ட குழுமம் என்ற சீன நிறுவனத்தை சுப்ரீம் கோர்ட் தடை செய்திருக்கிறது. இதன் மூலமாக அந்த குழுமம் இலங்கையில் எத்தகைய சட்டப்பணிகளை மேற்கொள்ள முடியாததுடன் சட்ட அதிகாரிகளை சந்திக்கவும் முடியாது என இலங்கை அட்டார்ணி அலுவலகம் கூறியுள்ளது.

Categories

Tech |