Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் உண்மையான நண்பர்” பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு…. நன்றி தெரிவித்த நப்தாலி பென்னட்….!!!

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் முன்னாள் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 1-ம் தேதி பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 4 வருடங்களில் 5-வது முறையாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் அதிபர் நப்தாலி பென்னட் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இந்த நாட்டில் தற்போது யாயிர் லாபிட் அதிபராக இருக்கிறார். மேலும் இந்திய பிரதமர் மோடி இந்தியாவின் உண்மையான நண்பராக இருக்கும் நப்தாலி பென்னட்டுக்கு நன்றி தெரிவிப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதற்கு நப்தாலி பென்னட் என்னுடன் நீண்ட காலமாக வலுவான நட்பில் இருக்கும் என்னுடைய நண்பருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |