Categories
அரசியல்

இந்தியாவின் ஏவுகணை நாயகன்…. மகத்தான பங்களிப்பை தந்த அப்துல் கலாம்…. அவர் செய்த சாதனைகள் இதோ….!!!!

ஏவுகணை நாயகனாக திகழ்ந்த அப்துல் கலாம் இந்திய விண்வெளித் துறைக்கு மகத்தான பங்களிப்பை தந்துள்ளார். இவர் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். விண்வெளி துறையில் ராக்கெட் ஏவுவது என்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய கனவாக இருந்தது. அந்தக் குறையை போக்குவதில் முழு கவனத்தை செலுத்தியவர் அப்துல் கலாம். SLV உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். அதன் மூலம் முதன்முதலாக ரோகிணி செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி இவர் சாதனை படைத்தார்.

அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலமாக இந்தியாவும் முதன்முதலாக விண்வெளி துறையில் காலடி எடுத்து வைத்து வரலாற்று சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக இஸ்ரோவில் பணியாற்றிய பின்னர் இந்திய பாதுகாப்பு துறையை பலப்படுத்தும் விதமாக உள்நாட்டிலேயே ஏவுகணையை உருவாக்கும் தலைமை பொறுப்பை ஏற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தலைமையின் கீழ் அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகள் உருவாக்கப்பட்டதால் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டார்.

1992 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பாதுகாப்புத்துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக செயல்பட்டார். பின்னர் பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக செய்து முத்திரை பதித்தார். இந்த சோதனைக்கு இன்ஜினியராக கலாம் பணியாற்றி அணு ஆயுத நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்தார். இந்தியாவில் இருக்கும் அணு ஆயுதம் உலகில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன.

1998-ல் இதயம் சம்பந்தமான டாக்டர். சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவில் கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் ‘கலாம்-ராஜூ ஸ்டென்ட்’ என பெயரிடப்பட்டது.இந்த கருவி உருவாக்கப்பட்டதற்கு பிறகு கரோனரி ஸ்டெண்டு கருவிகள் இறக்குமதி செய்வது 50 விழுக்காடு வரை குறைந்தது.

இந்தக் கருவி அப்பி கிரேடு வெர்ஷன் தற்போது சந்தையில் இருக்கின்றது. இதற்கு முன்னதாக அப்துல் கலாம் மற்றும் சோம ராஜு கூட்டணி 2012 ஆம் ஆண்டு கிராமப்புற சுகாதார பணிகளுக்காக பிரத்தியகர் டேப்லெட் ஒன்றை உருவாக்கினர். அது கிராமப்புற மக்கள் அவசர காலத்தில் விரைவாக மருத்துவத்தை பெற பெரும் உதவியாக இருக்கின்றது. இப்படி இந்தியாவிற்கு ஏராளமான சாதனைகளை புரிந்தவர் அப்துல் கலாம்.

Categories

Tech |