இந்தியாவின் யு பி ஏ டிஜிட்டல் பரிவர்த்தனை தற்போது மூளை முடுக்கெல்லாம் பரவி விட்டதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உத்தரகாண்ட் மலை கிராமம் ஒன்றில் உள்ள டீக்கடை ஒன்றில் qr ஸ்கேன் அட்டை வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள அவர், இந்தியாவின் கடைசி டீக்கடை என சமூக வலைத்தளத்தில் அதனை பதிவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர், ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்.இந்த புகைப்படம் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்பின் வளர்ச்சியையும் பாய்ச்சலையும் காட்டுகிறது எனக் கூறி பாராட்டியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையம் ஆகிவிட்ட நிலையில் ஒரு சாதாரண டீக்கடையில் கூட இன்று யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை இருப்பதாக இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.