கல்பனா சாவ்லா என்ற இந்திய வம்சாவழி பெண் நாசா மூலமாக விண்வெளிக்கு சென்றார் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் அவருடைய வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள் நம் கண்களில் நிற்கிறது. மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த இந்த பெண்ணிற்கு சிறு வயதில் இருந்தே ஏரோபிளேன்கள் மற்றும் விண்வெளி அதிகமாக பிடிக்கும். எந்த அளவுக்கு என்றால் தன் வீட்டை கடந்து போகக்கூடிய ஏரோபிளேன் நேரம் குறித்தும் அவர் தெரிந்துகொள்வார். பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்பனாவிடம், அவருடைய அப்பா என்ன செய்ய போகிறாய் என கேட்டபோது விண்வெளிக்கு போக போவதாக கூறினார். அப்போது ஒரு பெண்ணுக்கு இதெல்லாம் தேவையா என்று சுற்றி இருந்தவர்கள் அவரை விமர்சித்தனர்.
ஆனால் அதையெல்லாம் கல்பனா சாவ்லா கண்டுகொள்ளவில்லை. தனது வாழ்நாள் கனவான விண்வெளிக்கு 41 வயதில் கல்பனா நாசா மூலமாக போகுவதற்கு தயாரானார். ஒரு இந்திய வம்சாவளி பெண் நாசா மூலம் விண்வெளிக்கு சென்றபோது இந்தியா மிகவும் பெருமை அடைந்தது. பூமியை 200 தடவை சுற்றி ஆராய்ச்சி செய்துவிட்டு பின் கல்பனா சாவ்லா திரும்பியபோது தரை இறங்குவதற்கு 16 நிமிடத்தில் முன் வெடிக்கிறது. அப்போது கல்பனாவுடன் சேர்ந்து கூட இருந்த 5 பேரும் சிதறிப் போனார்கள். அவ்வாறு இறந்தாலும் இன்னும் சாதனைப் பெண்மணியாக கல்பனா சாவ்லா வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.