Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் சிறந்த கைவினை பொருள் எது தெரியுமா?…. மத்திய அரசு நடத்திய வாக்கெடுப்பு…. வெளியான முடிவு….!!!!

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பு இணையதளம் மூலம் நடந்தது. இந்த போட்டியில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றது. இதில் கைவினை பொருட்கள், விவசாய பொருட்கள், இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள், உணவு பொருட்கள் என 5 வகையான பொருட்கள் இடம்பெற்றது. இதில் அதிக வாக்குகளை பெற்று கைவினைப் பொருட்களுக்கான பிரிவில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கைவினைப் பொருட்களுக்கான மேம்பாடு அமைச்சகத்திடம் அதற்கான சான்றிதழை மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் மேற்பார்வை அலுவலர் ப.சஞ்சய் காந்தி கூறியது, தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில் இந்த கலைத்தட்டு வடிவமைக்கப்பட்டது. தஞ்சாவூரில் உள்ள கைவினை கலைஞர்களின் கைவண்ணத்தில் இந்த தட்டு உருவாக்கப்படுகிறது. தஞ்சாவூரில் தற்போது 250 பேர் இந்த கலை தட்டுகளை உற்பத்தி செய்து தஞ்சாவூரின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர். கலைநயமிக்க தஞ்சாவூர் கலைத்தட்டு 2016 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பதிவுக்கான விண்ணப்ப தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது. இதனையடுத்து 200க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பெற்று தரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதில் தஞ்சாவூர் கலைத்தட்டு தேசிய அளவில் சிறந்த கைவினை பொருட்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் கைவினை கலைஞர்களுக்கு கிடைத்த பாராட்டும், கவுரவமாகும் என தெரிவித்தார்.

Categories

Tech |