Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவின் சூப்பர் பாஸ்ட் முதல்வர்… கொரோனாவே பயந்து ஓடும்… முதல்வரை புகழ்ந்த அமைச்சர்…!!!

முதல்வரை பார்த்து எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டுமல்ல கொரோனாவுக்கும் பயம்தான் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் முதல்வரை பார்த்து எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டுமல்ல, கொரோனாவுக்கும் பயம்தான் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.மேலும் நாடி பிடித்து மருத்துவர்கள் நோயை அறிவது போல மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர் முதல்வர். முதல்வர் பழனிசாமி இந்தியாவின் சூப்பர் பாஸ்ட் முதல்வராக இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக அதிமுக ஆட்சியைப் பார்த்து தமிழகத்தை நோக்கி வந்த புயல் யூ-டர்ன் அடித்து சென்றதாக மற்றொரு அமைச்சர் சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |