Categories
உலக செய்திகள்

இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி… “பிரதமர் மோடி எனது நண்பர்”… பிரான்ஸ் அதிபரின் டூவிட்…!!!!!

இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் முடிவில் ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்தியா அடுத்த வருடம் இதற்கான மாநாட்டையும் தலைமை ஏற்று நடத்த உள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அடுத்த வருடம் நடைபெற்று முடியும் வரை இந்த ஜி 20 மாநாட்டின் தலைமை பொறுப்பு நம்மிடம் இருக்கும். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்  twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்  கூறப்பட்டுள்ளதாவது, “g20 அமைப்பின் தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியாவிற்கு பிரான்ஸ் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும் ‘ஒரு பூமி’. ‘ஒரு குடும்பம்’. ‘ஒரு எதிர்காலம்’. ஜி 20 தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி என்னுடைய நண்பர். உலகில் சமாதானத்தை உருவாக்கி அமைதியை காத்திட இன்னும் நிலையான உலகை கொண்டு வந்திட எங்களை ஒன்றிணைப்பார் என நான் நம்புகிறேன்” என இமானுவேல் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |