இந்தியாவின் டாப்-10 கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளது.
கல்வி அமைச்சகத்தின் வருடாந்திர தரவரிசையில் டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடத்தையும், LSR மகளிர் கல்லூரி பட்டியலில் இரண்டாம் இடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த லயோலா கல்லூரி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதையடுத்து கோவையைச் சேர்ந்த பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 6-ஆம் இடத்தையும், சென்னை மாநிலக் கல்லூரி 7-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
அதேபோல் இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் முதலிடத்தை டெல்லி எய்ம்ஸ் கல்லூரியும், சண்டிகர் (PGIMER Chandigarh) இரண்டாம் இடத்தையும், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் வேலூர் சிஎம்சி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகங்களில் கோவை அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது.