ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவைச் சேர்ந்த 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. எப்போதும்போல இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்த முறையும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலர் ஆகும். தொடர்ந்து 14வது ஆண்டாக இவர் இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தை தக்க வைத்து வருகிறார்.
இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆறு பெண் தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஓபி ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் ரூ. 13.46 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 7ஆம் இடத்தை பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஹேவல்ஸ் நிறுவனத்தின் வினோத் ராய் குப்தா ரூ. 56,782 கோடி சொத்து மதிப்புடன் 24ஆம் இடத்திலும், யுஎஸ்வி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் லீனா திவாரி ரூ.32,874 கோடி சொத்து மதிப்புடன் 43ஆம் இடத்திலும் உள்ளனர்.
ஹலோ பைஜூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் (35) ரூ.30,265 கோடி சொத்து மதிப்புடன் 47ஆம் இடத்திலும், பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜூம்தார் ஷா ரூ.29,144 கோடி சொத்து மதிப்புடன் 53ஆம் இடத்திலும், டாஃபே குழுமத்தின் மல்லிகா ஸ்ரீனிவாசன் ரூ.21,596 கோடி சொத்து மதிப்புடன் 73ஆம் இடத்திலும் உள்ளனர்.