இந்தியாவிற்கான தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியம் பதவியை ராஜினாமா செய்தார்.
மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கே.வி சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்.. ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டுக்கு முன் வெளியிடப்படும் ‘எகனாமிக் சர்வே’ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை அலசக் கூடிய அறிக்கைகளை அவர் தலைமையில் நிதி அமைச்சகம் தயாரித்து நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு வருடமும் தாக்கல் செய்தது..
இந்த சூழ்நிலையில் 3 வருடங்கள் நிதி அமைச்சகத்தில் பணிபுரிந்த பிறகு தற்போது பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் கல்விப் பணிக்கு செல்ல இருப்பதாக கே.வி சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.. அவர் இதற்கு முன்பு கல்வித் துறையில் பணியாற்றியது அனைவருக்கும் நன்றாக தெரியும்..
எனவே மீண்டும் கல்வி, ஆராய்ச்சி, போன்ற விஷயங்களில் தன்னுடைய நேரத்தை செலவிட இருப்பதால் அவர் நிதி அமைச்சரின் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு புதிய பணியை மீண்டும் மேற்கொள்கிறார்.. ஆகவே நிதியமைச்சகத்திற்கு மத்திய அரசு மீண்டும் ஒரு புதிய பொருளாதார ஆலோசகரை நியமிக்க வேண்டியுள்ளது..