Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் திறமைக்கு… சீனா ஈடாகுமா?… இந்திய விமானப்படை தளபதி… பெருமிதம்…!!!

இந்திய விமானப்படையின் திறமைக்கு சீன விமானப்படை ஒருபோதும் ஈடாகாது என்று இந்திய விமானப்படை தளபதி பெருமிதம் கூறியுள்ளார்.

இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. சீனா அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவி கொண்டிருக்கிறது. அந்த பதற்றத்தை தணிப்பதற்கு இருநாட்டு ராணுவத்தினரிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அதில் ஒரு முன்னேற்றமும் இல்லை. வருகின்ற 12ஆம் தேதி அடுத்தகட்ட ராணுவ பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள் லடாக் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் வருகின்ற எட்டாம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.எஸ்.பதாரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சீன விமானப்படை ஒருபோதும் இந்திய விமானப்படையின் திறமைக்கு ஈடாகாது. ஆனால் எதிரியை குறைத்து மதிப்பிட முடியாது. அதனால் லடாக் பகுதியில் அனைத்து இடங்களிலும் இந்திய படைகளை நிறுத்தி உள்ளோம்.

அனைத்து அச்சுறுத்தல்களையும் சமாளிக்க விமானப்படை தயாராக உள்ளது. இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்களை சேர்த்த பிறகு, நமது படை வலிமை மேலும் அதிகரித்துள்ளது. வடக்கு எல்லை மற்றும் மேற்கு எல்லைப் பகுதியில் இருந்து ஒரே நேரத்தில் இருமுனை போர் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கு விமானப்படை தயாராக இருக்கின்றது”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |