இந்தியாவின் தேசிய சின்னமான நான்முகச் சிங்கம், புதிய நாடாளுமன்றத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சின்னத்தை தாங்கி பிடிக்க 6,500 கிலோ எடையில் 4 புறமும் எஃகு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த நிலையில், புதிய சின்னம் முன்பு போல் இல்லை எனவும் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சாடியுள்ளன.