Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவின் பிரதமர் வாஜ்பாய்… அடடே இது தெரியாம போச்சே…!!!

சிவகங்கையில் இருந்து அதிமுக கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் வாஜ்பாயை அழைக்க முதல்வர் டெல்லி செல்ல உள்ளதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் சிவகங்கையில் நடந்த அதிமுக கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் வாஜ்பாயை அழைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். வாஜ்பாய் மறைந்து விட்டார் என்பது கூட தெரியாமல், பிரதமர் நரேந்திர மோடி பெயரை கூறுவதற்கு பதிலாக வாஜ்பாய் பெயரை பாஸ்கரன் கூறியதை கேட்ட கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை கிண்டலடித்து சிலர் வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Categories

Tech |