Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் பெருந்தன்மையால் மகிழ்ச்சியடைகிறோம்”…. 3.3 தன் மருத்துவப் பொருட்களை வழங்கியதற்காக…. பிரபல நாட்டின் பாராட்டு….!!

இலங்கை நாட்டிற்கு ஆம்புலன்ஸ் சேவைக்காக 3.3 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது.

இலங்கை நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலவச முன் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவைக்காக 3.3 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா நேற்று முன்தினம் வழங்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவை  இலங்கையின் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள இந்தியாவின் உயர் ஆணையம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “உயிர்காக்கும் இச்சேவை சுமூகமாக இயங்குவதற்கு ஆதரவளிப்பதற்காக உயர் ஸ்தானிகர் 3.3 டன் அளவிலான மருந்துகளை நேற்று முன்தினம் வழங்கியுள்ளது. கடந்த இரு மாதங்களில் இந்தியாவிலிருந்து வழங்கப்பட்ட 370 மில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெரும் மதிப்பிலான மருத்துவ உதவியின் ஒரு பகுதியாக இத்தொகுதி வழங்கியுள்ளது. இந்தியாவிடமிருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களால் இச்சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதனால் நாங்கள் பெருத்த மகிழ்ச்சியடைகிறோம்” என்று பதிவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில், இந்த சுவா செரியா ஆம்புலன்ஸ் சேவை மையம் இந்தியாவிடமிருந்து பெறப்பட்டு 7.6 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.  இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் இயங்கும் இந்த சேவைக்கு இந்தியா இலவச ஆம்புலன்ஸ்களையும் வழங்கியுள்ளது. இங்கு வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சென்ற போது, ​​கொரோனா தொற்று காலத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதில், சிறப்பான பங்காற்றிய இந்த ஆம்புலன்ஸ் சேவையின் பணி மற்றும் சாதனைகளைப் பாராட்டியுள்ளார். அந்நாட்டு மக்களின் பயன்பாட்டிற்காக 25 டன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட மனிதாபிமானப் பொருட்களை இந்தியா கடந்த வாரம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதனை அடுத்து அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய கொரோனா சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயைப் பயன்படுத்துமாறு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட இந்த நிதியை தற்போது கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக பயன்படுத்த அதிபர் கூறியுள்ளார்.

 

 

 

Categories

Tech |