Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் முக்கிய முன்னுரிமை இதுதான்”…. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை….!!!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக துர்க்மெனிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் அஷ்காபட்டுக்கு சென்ற அவரை துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோ வரவேற்றுள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரு நாடுகளுக்கு இடையே நிதி மற்றும் பொருளாதாரம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தொடர்பாக நான்கு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இரண்டு நாட்டு அதிகாரிகள் இடையே கையெழுத்தானது.

மேலும் இந்த பயணத்தை தொடர்ந்து நெதர்லாந்து நாட்டிற்கு ஜனாதிபதி செல்ல இருக்கிறார். இதற்கிடையே நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சர்வதேச உறவுகள் நிறுவனத்தின் இளம் ராஜீய அதிகாரிகள் இடையே துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்தில் உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவுக்கு மத்திய ஆசிய நாடுகளுடன் தொடர்பு கொள்வது முக்கிய முன்னுரிமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |