Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவின் முடிவு….. “உலகக்கோப்பையை விட்டு வெளியேறும் பாகிஸ்தான்?…. பிசிபி எடுக்கப்போகும் முடிவு?

2023 ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய பிசிசிஐ ஒப்புக் கொள்ளாவிட்டால், 2023 உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்லாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது.. இந்த டி20 தொடர் முடிந்த பின் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் மீண்டும் நடைபெறுகிறது.. ஆனால் இந்தமுறை பாகிஸ்தானில் நடைபெறும்.. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாகக் குழுவின் முடிவின்படி அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2023 ஆசிய கோப்பையை நடத்தும் ஹோஸ்டிங் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்த சூழலில் தற்போது, பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் செவ்வாயன்று (நேற்று) மும்பையில் நடந்த பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, ஷா நிருபர்களிடம் கூறியதாவது, “ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்க நாங்கள் அந்நாட்டிற்கு செல்ல மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம். பாகிஸ்தானுக்குச் செல்லும் எங்கள் அணியின் அனுமதியை அரசாங்கம் தீர்மானிக்கிறது, எனவே நாங்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்க மாட்டோம், ஆனால் 2023 ஆசிய கோப்பைக்காக, போட்டி நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் கூட்டத்திற்கு முன் பிசிசிஐ உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட குறிப்புகளில் பாகிஸ்தான் நடத்தும் ஆசிய கோப்பையில் இந்தியா விளையாடுவது தொடர்பான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. “நாங்கள் நடுநிலையான இடத்தில் விளையாட முடிவு செய்துள்ளோம்” என்று ஷா மேற்கோள் காட்டினார்.

இந்நிலையில் பிசிபி தலைவர் ரமிஸ் ராஜாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள், ஷாவின் அறிக்கைக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் விலகுவதாக  யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் பேசியதாவது, “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இப்போது கடினமான முடிவுகளை எடுக்க தயாராக உள்ளது, ஏனெனில் இந்த பல அணிகள் பங்கேற்கும் ஐசிசி தொடர்களில்  பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாடாவிட்டால், ஐசிசி வர்த்தக பொறுப்புகள் மற்றும் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை நங்கள் அறிந்துள்ளோம்” என்று  PTI செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஆனால் அதிகார்வப்பூர்வ தகவல் எதுவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வரவில்லை..

இந்தியா ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் விளையாடி வருகின்றது. ஆனால் 2008 ஆசிய கோப்பைக்குப் பிறகு அண்டை நாட்டிற்கு பயணம் செய்யவில்லை. பாகிஸ்தான் கடைசியாக 2012 இல் ஒரு குறுகிய வெள்ளை பந்து இருதரப்பு தொடருக்காக இந்தியா வந்தது.

இதுதொடர்பாக பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.. பிசிபியை தொடர்பு கொண்டபோது ஷாவின் அறிக்கைக்கு உத்தியோகபூர்வ பதில் அளிக்க மறுத்துவிட்டது. தற்போதைக்கு நாங்கள் எதுவும் சொல்ல முடியாது, ஆனால் நாங்கள் விஷயங்களைப் பார்த்து, அடுத்த மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஐசிசி வாரியக் கூட்டம் போன்ற பொருத்தமான மன்றங்களில் இந்த விஷயத்தை எடுத்துக்கொள்வோம்” என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இருப்பினும், அடுத்த ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்று ஜெய் ஷாவின் அறிவிப்பால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் ராஜா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் மிகவும் வருத்தமடைந்ததாகவும், இப்போது சில கடினமான முடிவுகளை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அறியப்படுகிறது. “ஜெய் ஷாவின் அறிக்கையின் நேரத்தைக் கண்டு பிசிபி அதிகாரிகள் ஆச்சரியப்படுகிறார்கள், ஏனெனில் ஆசிய கோப்பை 2023 செப்டம்பரில் பாகிஸ்தானில் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது,” என்று ஒரு நபர் கூறினார்.

ஆசியக் கோப்பையை பாகிஸ்தானில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற ஆசிய கிரிக்கெட் வாரியம் (ஏசிசி) எதிர்பார்க்கும் என்று ஜெய் ஷா எந்தத் திறனில் அறிக்கை அளித்தார் என்று பிசிபி யோசித்து வருகிறது, ஏனெனில் ஹோஸ்டிங் உரிமைகள் ஜனாதிபதி அல்ல, ஏசிசியின் நிர்வாகக் குழுவால் வழங்கப்பட்டது,” என பிசிபி வட்டாரம். கூறுகிறத.

இந்த விஷயத்தில் ராஜா ACC க்கு ஒரு வலுவான கடிதத்தை அனுப்புவார் என்றும் ஷாவின் அறிக்கையை விவாதிக்க அடுத்த மாதம் மெல்போர்னில் ACC வாரியத்தின் அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு கோருவார் என்றும் பிசிபி வட்டாரங்கள் தெரிவித்தன.பிசிபி பல விருப்பங்களைப் பார்க்க முடிவு செய்துள்ளதாகவும், அதன் ஹோஸ்டிங் உரிமைகளுக்கு எந்த இடையூறும் ஏற்பட்டாலும் அதை ஏற்காது என்றும் ஒருவர் வெளிப்படுத்தினார்.

இதற்கிடையே ஆசிய கோப்பை நடுநிலையான இடத்தில் நடத்தக்கூடாது. தலைவர் பிசிபி ரமீஸ் ராஜா வலுவான முடிவை எடுக்க வேண்டும் மற்றும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை 2023 ஐ புறக்கணிக்க வேண்டும், ஒரு தேசமாக நாங்கள் ரமீஸ் ராஜாவுக்கு ஆதரவாக நிற்போம் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |