Categories
அரசியல்

இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்…. விடுதலைப் போராட்டத்தில் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் பங்கு….!!!!

இந்தியாவின் கவிக்குயில், நைட்டிங் கேர்ள் என்று அழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு கடந்த 1879-ம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு பெங்காலி பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை அகோரநாத் சட்டோபாத்யாயா ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியின் நிறுவனராக இருந்தார். அதோடு சிறந்த கவிஞராகவும், விஞ்ஞானியாகவும், தத்துவஞானியாகவும் அவர் திகழ்ந்தார். அதன் பிறகு சரோஜினி நாயுடுவின் தாயார் பரத சுந்தரி தேவி ஒரு சிறந்த கவிஞர் ஆவார். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிங் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரிட்டன் கல்லூரியில் படித்த சரோஜினி, எட்மெண்ட் காஸ் என்பவரின் அறிவுரையின் பேரில், சமூகச் சூழல், கோவில்கள், ஆறுகள், பெரிய மலைகள் போன்றவற்றை கருப்பொருளாக கொண்டு கவிதைகளை எழுதினார்.

கடந்த 1912-ம் ஆண்டு சரோஜினி நாயுடு எழுதிய தி ப்ரோகேன் விங், நீ பார்ட் ஆஃப் டைம், கடந்த 1915-ம் ஆண்டு எழுதிய தி கோல்டன் திரேஷோல்டு போன்ற நூல்கள் தலை சிறந்த படைப்புகளாக கருதப்படுகிறது. தன்னுடைய 19-வது வயதில் சரோஜினி நாயுடு ஜாதி மறுப்பு திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் கோவிந்தராஜலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்கு சரோஜினி நாயுடுவின் தந்தை ஆதரவாக இருந்தார். கடந்த 1905-ம் ஆண்டு இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்த சரோஜினி நாயுடு சுதந்திரத்திற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி பல முறை சிறை சென்றுள்ளார். இவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜவர்கலால் நேரு, காந்திஜி, சி.பி ராமசுவாமி ஐயர், அன்னிபெசன்ட் அம்மையார், ரவீந்திரநாத் தாகூர், முகமது அலி ஜின்னா, கோபாலகிருஷ்ண கோகலே போன்ற புகழ்பெற்ற தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு சரோஜினிக்கு கிடைத்தது.

நாட்டில் பெண்கள் அடிமையாகக் கிடந்ததை பார்த்து கொந்தளித்த சரோஜினி நாயுடு சமையலறையில் இருந்த பெண்களை வெளியே கொண்டு வந்து அவர்களை சாதனை பெண்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்ட சரோஜினி நாயுடு பெண்களிடையே அடிமைத்தனத்தை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். இதற்கு சரோஜினி நாயுடுவின் தந்தை உட்பட சிலர் உறுதுணையாக இருந்தனர். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு சரோஜினி நாயுடு உத்திரபிரதேச மாநிலத்தில் கவர்னராக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையை சரோஜினி நாயுடு பெற்றுள்ளார். இப்படி பல்வேறு விதமான சாதனைகளை செய்த சரோஜினி நாயுடு கடந்த 1949-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

Categories

Tech |