Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் மரணம்…. மு.க ஸ்டாலின் இரங்கல்….!!!!

மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியாற்றிய சாரதா மேனன் காலமானார். இவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன், சென்னையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இன்று மாலை 4 மணி அளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்வி பயின்ற அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

மனநோயாளிகளின் சிகிச்சையில் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர். சென்னையில் அவர் நிறுவி இயங்கி வரும் ‘மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் (SCARF)’ அவரது பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிடத் தக்கவையாகும்.அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதனை தொடர்ந்து பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாரதா மேனன் அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் அவர்கள் உடல்நலக்குறைவால் தனது 98 வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன்” என தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |