Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கவலைக்கிடம்…!!

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் கட்டி உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

இந்திய நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி,இவர் நேற்று இரவு வழக்கமான பரிசோதனையில்  மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் கட்டி உள்ளது என்று உறுதி செய்யப்பட்டு  ஆப்பரேஷன் மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது  .

இதனை அடுத்து நடந்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். தற்போது அவர் அனுமதிக்கப்பட்ட டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும்,அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு மூளையில் இருந்த கட்டி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது .

Categories

Tech |