Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் “ராஜா” மரணம்…… பெரும் சோகம்….. அதிகாரிகள் அஞ்சலி…..!!!!

இந்தியாவில் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்த புலி இன்று அதிகாலை உயிரிழந்தது.

நாட்டில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த ராஜா என்கின்ற புலி உயிரிழந்துள்ளது. மொத்தம் 25 ஆண்டுகள் 10 மாதம் மற்றும் 18 நாட்கள் வாழ்ந்த அந்த புலி மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு மீட்பு மையத்தில் இன்று அதிகாலை உயிரிழந்தது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு வடக்கு வங்காளத்தில் உள்ள ஜல்தபராவில் உள்ள கைராப்பரி சிறுத்தை புலி மீட்பு மையத்திற்கு இந்த புலி கொண்டுவரப்பட்டது.

உலகின் மிகப்பெரிய சதுப்பு நில டெல்டாவான சுந்தர்பன்சில் ஒருமுறை முதலை ஒன்று ராஜா புலியின் வலது பின் காலை கடித்ததால், அது வடக்கு வங்காளத்தில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டுவரப்பட்டது. சிறுத்தை புலி மீட்பு மையத்திற்கு கொண்டுவரப்பட்ட போது அந்த புலிக்கு 11 வயதாக இருந்தது. அதன் பிறகு 15 ஆண்டுகள் அந்த காப்பகத்தில் வாழ்ந்த புலி இன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தது. இந்த புலிக்கு வனத்துறை அதிகாரிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

Categories

Tech |