Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த முயற்சி…. சோனியா காந்தி குற்றச்சாட்டு….!!!

காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்று சோனியா காந்தி காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொதுச் செயலாளர்கள் பிரியங்கா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து சோனியா காந்தி காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சோனியா காந்தி கூறியதாவது, நாட்டில் சாதாரண குடிமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர்.

ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பை மக்களுக்கும் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் வெற்றி தோல்விகள் சகஜமான ஒன்று. பன்முகத் தன்மை கொண்ட நமது சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதற்கான நமது அர்ப்பணிப்பு இறுதி வரை நீடிக்க கூடியது. நமது சுதந்திரப் போராட்டத்தில் எந்தவித பங்களிப்பையும் அளிக்காத வெறுப்புணர்வு மற்றும் பிளவு சித்தாந்தங்களை கொண்ட சக்திகள் தற்போது நமது மதச்சார்பற்ற சமூகத்தில் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் பாரம்பரியத்தை அழிக்க யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது. தேசவிரோத சக்திகள் சமூக விரோத சக்திகளுக்கு எதிராக போராட காங்கிரஸ் அனைத்தையும் செய்யும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |