பண்டிகைகளை முன்னிட்டு இந்தியாவிற்குள் பாகிஸ்தான் ஆதரவு ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்தியாவில் பண்டிகை காலம் வர இருக்கும் நிலையில் பாகிஸ்தான் ஆதரவு ஆப்கானிஸ்தான் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவி காஷ்மீரில் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் லஷ்கர்-இ-தொய்பா, ஹர்க்கட் உல் அன்சார், மற்றும் ஹிஜ் புல் முஜாஜிதின் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் நாட்டிற்குள் உருவாகக்கூடும் என்றும், அவர்களுக்கு ஐஎஸ்ஐ ஆதரவு கொண்ட பாகிஸ்தான் அடிப்படையாகக் கொண்ட ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் உதவிட கூடுமென்றும் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்று நாற்பது பயங்கரவாதிகள் பூஞ்ச் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர்கள் திவன் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி பெற்றவர்களாகவும் தயாரிக்கும் பயிற்சி பெற்றவர்களாகவும், இதற்கான மூலப் பொருட்களை இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களாக செயல்படக்கூடிய நபர்கள் அவர்களுக்கு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.