கொரோனா தொற்றால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாக்கிஸ்தான் இணையவாசிகள் பதிவிட்டு வரும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானை சேர்ந்த இணையவாசிகள் இந்தியா தத்தளித்து வரும் இந்த சூழலில் அந்நாட்டுக்கு உதவ வேண்டுமென்று பாகிஸ்தான் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இணைய தளத்தில் #indianeedsoxigen என்ற டேக்கை உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்படும் அப்துல் காதர் தொண்டு நிறுவனம் இந்தியாவுக்கு நாங்கள் உதவுவோம் என்று இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர்.