ஜெர்மனியில் பாகிஸ்தானியர்கள் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு எதிராக நடத்திய போராட்டத்தை இந்திய இளைஞர் ஒருவர் எதிர்த்துள்ளார்.
வெளிநாடுகளில் வசித்து வரும் பாகிஸ்தானியர்கள் தற்போது இந்தியாவிற்கு எதிரான பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் ஜெர்மனியில் பாகிஸ்தானியர்கள் ஒன்றிணைந்த இந்தியாவிற்கு எதிரான பேரணி நடத்தி, அதில் பல்வேறு கோசங்களையும் எழுப்பியுள்ளனர். அச்சமயத்தில் அங்கிருந்த பிரசாந்த் என்னும் ஒரு இந்திய இளைஞர் அவர்களுக்கு எதிராக இந்திய மூவர்ணக் கொடி ஒன்றை பிடித்து நின்றுள்ளார்.
அதனைக் கண்டு கோபமடைந்த பாகிஸ்தானியர்கள் சிலர் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் இருந்து பிரசாந்தை காப்பாற்றினர். தனியாளாக நின்று அத்தனை பாகிஸ்தானியர்களுக்கு எதிராக இந்திய மூவர்ணக் கொடியில் நின்ற இந்திய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
https://twitter.com/vengurlekarpras/status/1294960544315846661