இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று தலிபான்கள் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆட்சியை பிடித்ததிலிருந்து அங்கு பெரும் கலவரம் நடந்து கொண்டு உள்ளது. இதனால் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று தலிபான்கள் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து டிஜிசிஏவுக்கு ஒப்புதல் கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த கடிதம் குறித்து மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளுக்கும் இந்தக் கோரிக்கையை தலிபான்கள் விடுத்துள்ளன. சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்காக தலிபான்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாகவே இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தான்க்கும் இடையே மீண்டும் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று தலிபான்கள் கடிதம் எழுதி இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.