Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு பயணத்தடை விதித்த நாடு.. இவர்களுக்கு மட்டும் விலக்கு..!!

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், கொரோனா அபாயம் காரணமாக இந்தியாவிற்கு பயணத் தடை விதித்துள்ளது.

இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையில் தத்தளித்து வருகிறது. இதனால் தினந்தோறும் நிலைமை மிகவும் மோசமடைந்துகொண்டே வருகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமையில் இருந்து சுமார் பத்து நாட்களுக்கு இந்திய பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல தடை அறிவித்திருக்கிறது.

இந்த தடையானது ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று இரவு 11:59 மணியளவிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. மேலும் கடந்த இரு வாரங்களில் இந்திய வழியாக பயணித்தவர்களுக்கு, வேறு எந்த பகுதியிலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இங்கிருந்து இந்தியாவிற்கு செல்லக்கூடிய விமானங்கள் வழக்கம் போல் செயல்படும். மேலும் இந்த தடையானது, ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள மக்கள், டிப்ளமாட்டிக் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் மற்றும் அதிகாரபூர்வ பிரதிநிதிகள் போன்றோருக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |