அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆயுதப்படை குறித்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து பேசினார். அதில், 2019 ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் உறவு மிகமோசமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அதனை தொடர்ந்து இந்தியாவின் அணு ஆயுதங்கள் ராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் தனது ஆயுதங்களைக் கொண்டு ராணுவத்துக்கு பயிற்சி வழங்கும் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தவும் அதிகரிக்கவும் செய்யும் என்று அவர் எச்சரித்தார்.