மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டு நீதி மந்திரிஜேனட் எல்லனை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை போன்ற பரஸ்பர நாடுகளுக்கான விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பில் வருகிற நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற இந்திய மற்றும் அமெரிக்க பொருளாதார மற்றும் நிதியுறவு சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு வருகை தரும்படி எல்லனுக்கு மத்திய நிதி அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை அடுத்து அதற்கு சம்மதம் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க நீதிமந்திரியாக இந்தியாவில் நடைபெற இருக்கும் பொருளாதாரம் மற்றும் நிதியுறவு கூட்டத்தில் ஒன்பதாவது நட்புறவு கூட்டத்தில் பங்கேற்க கூடிய தனது முதல் இந்திய பயணம் அமையும் என எல்லன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவானது ஜனநாயகம் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என உலக நாடுகளுடன் சான்றுடன் தெளிவாக காட்டப்பட்டு இருக்கிறது எனவும் எல்லன் கூறியுள்ளார். மேலும் நீதி மந்திரி நிர்மலா சீதாராமனின் இந்த பயணத்தில் ஜப்பான், தென் கொரியா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, பூடான், நியூசிலாந்து மற்றும் ஈரான் போன்ற பல்வேறு நாடுகளுக்கான இருதரப்பு சந்திப்புகளிலும் நிதி மந்திரி பங்கேற்றுள்ளார். இதே போல் சர்வதேச நிதி ஆணையம் உலக வங்கி ஜி-20 நீதிமன்றங்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர் போன்றோருடனான ஆண்டு கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கின்றார்.